ADDED : ஜூலை 04, 2024 01:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: புலிப்பட்டியில் பொன் முனியாண்டி கோயில் ஆனித் திருவிழா நள்ளிரவுநடந்தது. பக்தர்கள் 8 நாட்கள் விரதமிருந்தனர். நேர்த்திக்கடன் வேண்டி கிடைக்க பெற்ற பக்தர்கள் 17 ஆடுகள், 170 சேவல்களை காணிக்கையாக வழங்கினர்.
நள்ளிரவு வெட்டி தோலை உறிக்காமல் கறியை சுட்டு, எண்ணெய் இல்லாமல் சமைத்தனர். பிறகு சுவாமி முன்பு 21 சாமியாடிகளுக்கு 21 படையலிட்டு 'முப்புளியன் பூஜை' செய்யப்பட்டது.
அதைதொடர்ந்து வல்லாளபட்டி, மேலவளவு உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 2500க்கும் மேற்பட்டோருக்கு அசைவ விருந்து பரிமாறப்பட்டது. இதில் ஆண்கள் மட்டுமே பங்கேற்றனர்.