
வீதி முழுவதும் ஆக்கிரமிப்பு
மதுரை தெற்குவாசல் சின்னகடை வீதி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. ரோட்டை மறித்து நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- - அசோக், தெற்குவாசல்.
தண்ணீர் இல்லை
மதுரை மாநகராட்சி வார்டு 37 அன்பு நகர், பாரத் 2வது தெரு மற்றும் பசும்பொன் நகரில் 4 மாதங்களாக தண்ணீர் வரவில்லை. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ரவிசங்கர், அன்பு நகர்.
பாதாள சாக்கடையை மூடுங்க
மதுரை எல்லீஸ்நகர் 40 அடி ரோடு வார்டு 60ல் பாதாள சாக்கடை மூடி வெளியே சரியாக மூடாமல் மேலோங்கி இருக்கிறது. சரி செய்ய மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ராமகிருஷ்ணன், எல்லீஸ் நகர்.
மதுரை நரிமேடு சிங்கராயர் காலனி மெயின் ரோட்டில் பாதாள சாக்கடை இரும்பு மூடி வெளியே தெரியும்படி உள்ளது. வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- அபுபக்கர், நரிமேடு.
குப்பையை அகற்ற வேண்டும்
மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டில் பயணிகள் அமரும் இடங்களில் குப்பையை கொட்டுவதால் துர்நாற்றம் வீசுவதால் முகம் சுழிக்கும் நிலை உள்ளது. மாநகராட்சி, போக்குவரத்து அதிகாரிகள் ஐ.எஸ்.ஓ., தரச்சான்று பெற்ற இந்த பஸ் ஸ்டாண்டை துாய்மையாக பராமரிக்க வேண்டும்.
- பிரசாத், அண்ணாநகர்.
ரோட்டை சீரமைக்க வேண்டும்
மதுரை அரசு மருத்துவமனை அமைந்துள்ள பனகல் ரோட்டில் பாலப்பணி ஒருபுறம் நடக்கும் நிலையில், மறுபுறம் ரோடு குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். நெடுஞ்சாலைத்துறை சீரமைக்க முன்வரவேண்டும்.
- ஜனனி, செல்லுார்.

