ADDED : ஏப் 28, 2024 04:08 AM

சிக்னல் பழுது
மதுரை தெற்கு வாசல் சின்னக்கடை வீதியிலுள்ள போக்குவரத்து 'சிக்னல்' பழுதடைந்துள்ளது. இதனால் வாகனங்கள் செல்லும் போது நெரிசல் உண்டாகிறது. போலீசார் அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும்.
- அசோக், தெற்கு வாசல்
மின்விளக்கு தேவை
மதுரை கோல்டன் சிட்டி செங்குன்றத்துக்குச்செல்லும் வழியில் மின்விளக்கு இல்லாததால் அப்பகுதியினர் இரவு நேரங்களில் அவதிப்படுகின்றனர். மின்வாரிய அதிகாரிகள் விரைவில் மின்விளக்கை பொருத்த வேண்டும்.
- திவ்யா, கோல்டன் சிட்டி
ரோடு வேண்டும்
திருநகர் டீச்சர்ஸ் காலனிக்கு மேற்கே தனக்கன்குளம் செல்லும் பகுதி மோசமான நிலையில் உள்ளது. மக்கள் பயணிக்க முடியாத வகையில் சிரமமாக இருக்கிறது. உடனடி நடவடிக்கை தேவை.
- சுரேஷ், திருநகர்
மின்மாற்றி தேவை
மதுரை வேடர்புளியங்குளம் வி.பி. சிந்தன் நகரில் இரவு நேரத்தில் குறைந்த மின் அழுத்தம் ஏற்பட்டு மின் சாதனங்கள் பழுதடைகின்றன. கூடுதலாக புதிய மின்மாற்றி (டிரான்ஸ்பார்மர்) அமைக்க வேண்டும்.
- ரேணுகா தேவி, வி.பி.சிந்தன் நகர்
குறைவான மின்சப்ளை
மருதுபாண்டியர் 4வது குறுக்குத் தெருவில் மின் விநியோகம் குறைவாக உள்ளதால் மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கிறது. மின் வாரிய அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- நீலமேகம், விஸ்வநாதபுரம்
தேங்கும் குப்பை
கே.ஆர்.பி. நகர், பசுமலை பகுதியில் குப்பை அகற்றப்படாமல் இருக்கிறது. துர்நாற்றத்தை தாண்டி மக்கள் நடந்து, கடந்து செல்ல சிரமமாக உள்ளது. துாய்மை பணியாளர்கள் உடனே குப்பையை அகற்ற வேண்டும்.
- சுபாஷ், பசுமலை

