
தெருநாய் தொல்லை
மதுரை சொக்கலிங்க நகர் 7வது மெயின் ரோட்டில் தெருநாய்கள் அதிகளவில்உலா வருகின்றன. நோய் தொற்றுடன் சுற்றித் திரிவதால் பாதிப்பு அபாயம் அதிகமுள்ளது. மாநகராட்சி அதிகாரிகள்நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- தினேஷ் குமார் சொக்கலிங்க நகர்
விபத்து அபாயம்
மதுரை பைபாஸ் ரோடு துரைசாமி நகர், ஜெய் நகர், நேரு நகர் பகுதிகளில் இருபுறமும் வாகனங்கள் வேகமாகச் செல்வதால் ரோட்டைக்கடப்பது சிரமமாகஉள்ளது. அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஹரிஷ் முத்துராமசாமி துரைசாமி நகர்
குண்டுகுழி ரோடுகள்
தனக்கன்குளம் ஊராட்சி குறிஞ்சி நகர் 12வது தெரு ரோட்டில் ஜல்லிகள் பெயர்ந்து படுமோசமாக உள்ளது. வாகன ஓட்டிகள் விழுந்து எழுகின்றனர். ஊராட்சியில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. அதிகாரிகள் தரமான ரோடு அமைக்க வேண்டும்.
- செல்லப்பா ராமன், குறிஞ்சி நகர்
ஆக்கிரமிப்புச் சாலை
மதுரை அழகர்கோவில் ரோடு பாலாஜி நகர் அருகே கடைகளால் நான்குவழிச் சாலை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. வாகனங்களில் செல்லவும், நடந்து செல்வதற்கும் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். அதிகாரிகள் உடனே ஆக்கிரமிப்புகளை அகற்றி அபராதம் விதிக்க வேண்டும்.
- வெங்கடேஷ், பாலாஜி நகர்
பள்ளங்களை மூடுங்கய்யா
மதுரை அண்ணாநகர் 80 அடி மெயின் ரோட்டில் 5 நாட்களுக்கு முன் டூவீலர் பார்க்கிங் ஏரியாவில் கேபிள் ஒயர் பதிக்க தோண்டிய பள்ளம் சரிவர மூடப்படாமல் உள்ளது. இதனால் டூவீலர்களை பார்க்கிங் செய்ய முடியவில்லை. மாநகராட்சி அதிகாரிகள் பள்ளங்களை சமன்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.
- நீலகண்டன், கீழவாசல்
மேம்பாலத்தில் விரிசல்
சோழவந்தானில் புதிதாக கட்டிமுடித்த ரயில்வே மேம்பாலத்தில் ஆங்காங்கே பள்ளங்கள், விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. அசம்பாவிதம் ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கவுரிநாதன், சோழவந்தான்