ADDED : செப் 15, 2024 12:59 AM
மதுரை : மதுரை பந்தடி சுதா 65.வயிற்றுவலியால் விக்ரம்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் வயிற்றில் பெரிய கட்டி இருந்ததும், அதை கிழித்தபடி சிறுகுடல் வெளியேறிய நிலையில் இருந்ததால் ரத்தம் வெளியேறி, வலியால் அவதிப்பட்டதும் தெரிந்தது. தலைமை மருத்துவர் நாராயணசாமி, டாக்டர் வீரராஜ்குமார் குழுவினர் ஆபரேஷன் செய்தனர்.
அவர்கள் கூறியதாவது:அப்பெண் துணி துவைக்கும்போது வயிற்றுக்குள் இருந்த சிறுகுடல் வெளியே வந்துள்ளது. பதறிய அவர் மருத்துவமனைக்கு வந்தார். பரிசோதனையில் அவரது வயிற்றுக்கு வெளியே ஒரு அடி அளவுள்ள பெரிய கட்டி இருந்தது. அதனை கிழித்து வெளியேறிய நிலையில் சிறுகுடல் பகுதி இருந்தது.
ஆபரேஷன் செய்து பழைய நிலையில் வைப்பது சிரமமாக இருந்தது. அந்த கட்டியினுள் பெருங்குடல், சிறுகுடல் என எல்லாம் இருந்ததே அதற்கு காரணம். இரண்டரை மணி நேர ஆபரேஷனுக்குபின் குடலை உள்ளே தள்ளி, கட்டியை மட்டும் அகற்றினோம் என்றனர்.