ADDED : மே 12, 2024 03:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி: வாடிப்பட்டி பேரூராட்சி தாதம்பட்டி மந்தையில் உள்ள நாடக மேடை பராமரிப்பின்றி வீணாகிறது.
இங்குள்ள தாதம்பட்டி, நீரேத்தான் மந்தை திடலில் பழுதடைந்த நாடக மேடை அகற்றப்பட்டது. பின் 2006ல் ரூ.2.60 லட்சம் மதிப்பில் நாடக மேடை கட்டப்பட்டது. பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்த நிலையில், 8 ஆண்டுகளுக்கும் மேலாக நிகழ்ச்சிகள் நடக்கவில்லை. இதனால் பராமரிப்பின்றி கட்டடங்கள், படிக்கட்டுக்கள் சேதமடைந்துள்ளன.
இந்த மந்தை திடலில் தான் கட்சி பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம் போன்றவற்றை போக்குவரத்துக்கு இடையூறாக மேடை அமைத்து நடத்துகின்றனர். நாடக மேடையை பராமரிக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.