/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ரயில்வே ஸ்டேஷனில் காத்திருப்பு அறை
/
ரயில்வே ஸ்டேஷனில் காத்திருப்பு அறை
ADDED : ஜூன் 27, 2024 05:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை, : மதுரை ரயில்வே ஸ்டேஷனில் மறுசீரமைப்பு பணிகள் காரணமாக முதல் பிளாட்பாரத்தில் இரண்டாம் வகுப்பு பயணிகளுக்கான காத்திருப்பு அறை மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஸ்டேஷனின் கிழக்கு, மேற்கு பகுதிகளை இணைக்கும் புதிய நடை மேம்பாலம் அருகே நவீன வசதிகளுடன் பயணிகளுக்கான காத்திருப்பு அறைக்கான முகப்பு கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.
அதன் தரைதளத்தில் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பயணிகளின் வசதிக்காக 343 சதுர மீட்டரில் காத்திருக்கும் அறை தற்காலிகமாக திறக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உயர்வகுப்பு பயணிகளுக்கான காத்திருப்பு அறை முதல் பிளாட்பாரத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.