/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தோலில் வெண்புள்ளியா... கவலை வேண்டாம்
/
தோலில் வெண்புள்ளியா... கவலை வேண்டாம்
ADDED : ஜூன் 27, 2024 04:15 AM
தோலில் வெள்ளையாக நிறம் மாறினாலே வெண்புள்ளி (Vitiligo) வந்துவிட்டதோ என்ற பயமும் கவலையும் வந்து விடுகிறது. அது பூஞ்சை காளான் ஏற்படுத்தும் தேமலாக இருந்தால், அதற்கான சோப்பும், மருந்தும் பயன்படுத்தினாலே சரியாகி விடும்.
வெண்புள்ளியின் ஆரம்ப கட்டம், பலருக்கு உதட்டில் இருந்து தொடங்கும். மற்ற இடங்களில் ஒன்றிரண்டு வரும்போதே சிகிச்சை எடுத்து கொண்டால் சில மாதங்களிலேயே சரி செய்து விடலாம்.
சிலருக்கு தோலில், உதட்டில் மீண்டும் மீண்டும் சேதமோ அல்லது காயமோ ஏற்படும்போது மெலனோசைட்டுக்கு எதிராக ஆட்டோ ஆன்டிபாடீஸ் உருவாகி அது மெலனோசைட்டை அழித்துவிடும்.
அதுவே வெண்புள்ளிக்கு காரணம். அதன் வீரியத்தன்மை அதிகமாகும் போது வெயில் படும் இடங்கள் சேதமாகி கை, கால், முகத்தில் வெண்புள்ளி வரலாம். சோப்பு போன்ற ரசாயனத்தினாலும் சருமம் சேதமாகி கை, கால்களில் வரலாம். இதற்கான பழைய சிகிச்சை முறையான ஸ்டீராய்டு மாத்திரைகளை உட்கொள்வதால் உடல் பருமன் அதிகரிப்பது போன்ற பக்க விளைவுகளின் காரணமாக பலர் சிகிச்சையை கைவிடுவதுண்டு.
மெலனோஸில் மாத்திரை எடுத்துக்கொள்வதால் வெண்புள்ளியில் கொப்பளம் ஏற்படுவதன் காரணமாகவும் சிலர் சிகிச்சையை தொடர்வதில்லை. இன்று அதற்கான பல நவீன சிகிச்சை முறைகள் வந்துவிட்டன.
தற்போது டோபாசிடினிப் (Tofacitinib) எனும் மாத்திரை, மருந்துகள் பக்க விளைவுகளின்றி நல்ல பலனைத் தருகிறது. இதனுடன் புற ஊதாக்கதிர் சிகிச்சை மூலம் நம் வீட்டில் இருந்தே சரி செய்யும் வகையில் சிறு அளவிலான விளக்கை பயன்படுத்தும் போது விரைவாக தோலின் நிறம் மீண்டும் பழைய நிலைக்கு மாறுவதுடன், முழுமையான மாற்றத்துடன் சிறந்த தீர்வை கொடுக்கிறது.
- -டாக்டர் குமரேசன்மதுரை
81899 11119