நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை திருப்பாலை சாரதி நகர் மாரியம்மன், கருப்பண சுவாமி கோயிலில் ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் சார்பில் 14வது ஆண்டு ஆடி களரி உற்ஸவம் நடந்தது.
ஜூலை 18 முதல் 21 வரை நடந்த இவ்விழாவில் யாகசாலை பூஜை, செல்வ விநாயகர் பிரதிஷ்டை, சிறப்பு அலங்காரங்களுடன் பூஜை, விளக்கு பூஜை, 11 வகையான மூலிகை பொருட்கள் கொண்டு அம்மனுக்கு அபிஷேகம், சிறப்பு அன்னதானம் நடந்தது.விளக்கு பூஜையை நிர்வாகிகள் கமலம், பார்வதி, கஸ்துாரி நடத்தினர்.