/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
திருமங்கலம் ஒன்றிய அலுவலகத்திற்கு பாதையில்லாமல் அவதி
/
திருமங்கலம் ஒன்றிய அலுவலகத்திற்கு பாதையில்லாமல் அவதி
திருமங்கலம் ஒன்றிய அலுவலகத்திற்கு பாதையில்லாமல் அவதி
திருமங்கலம் ஒன்றிய அலுவலகத்திற்கு பாதையில்லாமல் அவதி
ADDED : ஆக 14, 2024 01:00 AM

திருமங்கலம்: திருமங்கலத்தில் பாலம் கட்டும் பணியில் அதிகாரிகளின் முறையான திட்டமிடுதல் இல்லாததால் ஒன்றிய அலுவலகத்திற்கு பாதை இல்லாமல் அலுவலர்கள், பொதுமக்கள் தவிக்கின்றனர்.
திருமங்கலம் விமான நிலைய ரோட்டில் ரூ. 34 கோடியில் மேம்பாலம் அமைக்கும் பணி சில மாதங்களாக நடக்கிறது. இந்தப் பணிக்காக பாலம் அருகே கடைகள், வணிக வளாகங்கள் இடிக்கப்பட்டன.
இந்நிலையில் அருகே உள்ள ஒன்றிய அலுவலகம், வணிக வளாகம், சர்ச் உள்ளிட்டவை சமீபகாலம் வரை காலி செய்யப்படவில்லை. இப்பணியில் நேற்று முன்தினம் ஒன்றிய அலுவலகம் முன்பு பெரிய பள்ளம் தோண்டி பணிகள் நடக்கின்றன.
இதனால் அலுவலகம் வருவோர் யாரும் உள்ளே செல்ல முடியவில்லை. அதற்கு பதிலாக தாலுகா அலுவலகத்திற்கு பின்புறம் உள்ள பகுதி வழியாக நுழைந்து செல்லும் அவலம் உள்ளது.
ஒன்றிய அலுவலகத்திற்கு 4 ஆண்டுகளாக கப்பலுாரில் கட்டடம் கட்ட இடம் தேர்வு செய்தனர்.
அதற்கு நிர்வாக அனுமதி பெறுவதில் அதிகாரிகள் தாமதம் செய்து வந்தனர். இரண்டு மாதங் களுக்கு முன்பு இங்கு புதிய அலுவலகம் கட்டபூமி பூஜை நடத்தி பணிகள் நடக்கின்றன.
ஆனால் அதிகாரிகள் முறையாக திட்டமிடாததால் புதிய அலுவலகம் கட்டும் பணிகள் துவக்கத்திலேயே தாமதம் ஏற்பட்டுள்ளது.
மேலும் பழைய அலுவலகத்திற்கான பாதை வசதியை ஒருவர்கூட யோசிக்கவே இல்லை. இதனால் பொதுமக்கள், அலுவலர்கள் இப்போது அவதிப்படுகின்றனர்.
மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.