/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கல்வி இன்டர்நேஷனல் பப்ளிக்பள்ளி மாணவர்கள் சாதனை
/
கல்வி இன்டர்நேஷனல் பப்ளிக்பள்ளி மாணவர்கள் சாதனை
ADDED : ஜூலை 02, 2024 06:06 AM
மதுரை : ஐரோப்பாவை தலைமையகமாக கொண்ட மை மிஷன் குளோபல் பவுண்டேஷன் நிறுவனம் ஆன்லைனில் நடத்திய 'மை மிஷன் டிரீம் டிராப் - 2024' என்ற தலைப்பிலான ஓவியப் போட்டிகளில் சோழவந்தான் கல்வி இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி மாணவர்கள் கதிர்குமணன், அபினேஷ் ஆகியோரின் படைப்புகள் தேர்வு செய்யப்பட்டன.
உலகளவில் பள்ளி மாணவர்களுக்கு புதுமை, கற்பனை திறமைகளை வெளிக்கொண்டுவரும் வகையில் நடத்தப்பட்ட இப்போட்டிகளில் கதிர்குமணன் 'ரோபோ கம்பானியன்' என்ற தலைப்பிலும், அபினேஷ் 'தற்காப்பு கண்காணிப்பு ரோபோ' என்ற தலைப்பிலும் ஓவிய படைப்புகளை அளித்தனர்.
அவர்களின் படைப்புகளுக்கு செயல்வடிவமாவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
முதல்வர் அருணா கூறுகையில் எங்கள் பள்ளி மாணவர்களின் இப்படைப்புகள் இளைய தலைமுறையினருக்கு முன்னோடியாக அமையும் என்றார்.