/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பழமையான பாசன கால்வாய் பாலத்தால் விபத்து அபாயம்
/
பழமையான பாசன கால்வாய் பாலத்தால் விபத்து அபாயம்
ADDED : மே 01, 2024 07:39 AM
வாடிப்பட்டி : வாடிப்பட்டி அருகே பெரியாறு பாசன கால்வாயில் கோட்டைமேடு, நரிமேடு இடையேயான பழமையான பாலத்தால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
இப்பகுதி நரிமேட்டில் இருந்து வாடிப்பட்டி பகுதிக்கு அரசு பள்ளி, கல்லுாரி மாணவர்கள், வேலைக்கு செல்லும் கிராமத்தினர் கோட்டைமேடு பகுதியில் இருந்து விவசாய நிலங்களுக்கு செல்வோர் எனதினமும் இப்பாலத்தை கடந்து செல்கின்றனர்.
டூவீலர், ஆட்டோக்கள் மட்டுமே செல்லும் அளவிலான குறுகிய பழமையான பாலத்தின் தடுப்புச் சுவரின் கற்கள் பெயர்ந்து விழுந்துள்ளன.
1890களில் மர ஷட்டர்களுடன் கட்டப்பட்ட பாலம் பராமரிப்பின்றி வலுவிழந்துள்ளது. இப்பாலத்தை அகற்றி புதிதாக கட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.