/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கோயில் குளத்தை சுத்தம் செய்ய நடவடிக்கை தேவை
/
கோயில் குளத்தை சுத்தம் செய்ய நடவடிக்கை தேவை
ADDED : மே 31, 2024 05:33 AM

வாடிப்பட்டி : வாடிப்பட்டி அருகே அய்யங்கோட்டையில் சாஸ்தா அய்யனார் கோயில் குளம் பராமரிப்பு இல்லாததால் சுகாதார கேடாக காட்சியளிக்கிறது.
ஹிந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள இக்கோயில் எதிரே 2 குளங்கள் உள்ளன. ஒரு குளம் சுற்றுச்சுவர் இன்றி உள்ளது. மற்றொரு குளத்தில் சுற்றிலும் தனிநபர்களின் நன்கொடையில் சுவர், படிக்கட்டுகள், பக்தர்கள் அமர சிமென்ட் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.
அய்யங்கோட்டை கண்மாயில் இருந்து நீர்வரத்து வசதி உள்ளது. நான்கு வழிச்சாலை சர்வீஸ் ரோட்டின் அருகே மரங்கள் சூழ அமைந்துள்ள கோயில் வளாகத்தை, சுற்றுலா பயணிகள், வழிப்போக்கர்கள் உணவருந்தும் இடமாக பயன்படுத்துகின்றனர். சிலர் விட்டுச் செல்லும் கழிவுகள், பிளாஸ்டிக் கப், பாட்டில்கள், பூஜை அறையில் காய்ந்த பூக்களை பாலிதீன் கவரில் கட்டி குளத்தில் வீசிச் செல்கின்றனர். இதனால் குளம் முழுவதும் கழிவுகளால் நிரம்பி அசுத்தமான நிலையில் உள்ளது. குளத்தை சுத்தப்படுத்த அறநிலையத்துறை, ஊராட்சி நிர்வாகம் முன் வர வேண்டும்.