/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
முதல்பக்கத்தில் கும்பாபிஷேகம் செய்தியுடன் ஆட் மேட்டர்//
/
முதல்பக்கத்தில் கும்பாபிஷேகம் செய்தியுடன் ஆட் மேட்டர்//
முதல்பக்கத்தில் கும்பாபிஷேகம் செய்தியுடன் ஆட் மேட்டர்//
முதல்பக்கத்தில் கும்பாபிஷேகம் செய்தியுடன் ஆட் மேட்டர்//
ADDED : ஜூன் 10, 2024 05:38 AM

திருப்பரங்குன்றம், ; திருப்பரங்குன்றம் கூடல்மலை தண்டபாணி சுவாமி, கூடல் நாயகர், கூடல் அம்பிகை கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
ஜூன் 6 காலையில் மகா கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை துவங்கியது. நேற்று காலை ஆறாம் கால யாகசாலை பூஜை பூர்த்தி செய்யப்பட்டு, யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய குடங்கள் கோபுர கலசங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது.
பூஜை முடிந்து கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. பின்பு மூலவர்களுக்கு மகா அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
சோழவந்தான்
சோழவந்தான் பேட்டையில் சந்தன மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. ஜூன் 7 முதல்கால யாக பூஜைகள் கணபதி ஹோமத்துடன் துவங்கின. நேற்று காலை 4ம் கால யாக பூஜையை தொடர்ந்து வரதராஜ பண்டிட் தலைமையில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டது. அம்மன், கருப்பணசாமி, காளியம்மன், பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.
அலங்காநல்லுார் அருகே 15.பி.மேட்டுப்பட்டி வடக்குத்தெரு பங்காளிகளுக்கு பாத்தியப்பட்ட நல்ல பிறவியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.
நேற்று காலை 2ம் கால யாக பூஜையை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றினர்.
பாலமேடு அருகே அய்யூரில் அய்யனார் சுவாமி, சந்தன கருப்புசாமி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று காலை இரண்டாம் கால யாக பூஜையை தொடர்ந்து கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றினர். சுவாமிகள், காவேரி அம்மன் மற்றும் 21 பரிவார் தெய்வங்களுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. ஏற்பாடுகளை சந்தன கருப்பு சுவாமி பங்காளிகள் செய்திருந்தனர்.