/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அண்ணாமலை மீது மதுரையில் போலீசில் அ.தி.மு.க., புகார்
/
அண்ணாமலை மீது மதுரையில் போலீசில் அ.தி.மு.க., புகார்
அண்ணாமலை மீது மதுரையில் போலீசில் அ.தி.மு.க., புகார்
அண்ணாமலை மீது மதுரையில் போலீசில் அ.தி.மு.க., புகார்
ADDED : ஆக 28, 2024 03:58 AM
மதுரை: அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி குறித்து பா.ஜ., தலைவர் அண்ணாமலை தொடர்ந்து விமர்சித்து வருவதாக மதுரை போலீஸ் கமிஷனர் லோகநாதனிடம் அ.தி.மு.க., மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் சரவணன் புகார் அளித்தார்.
அதில், 'ஆக.,25ல் சென்னை பொதுக்கூட்டத்தில் பழனிசாமியை களங்கப்படுத்தும் நோக்கில் அண்ணாமலை பேசியுள்ளார். அவமானப்படுத்தும் நோக்கிலும், பொது அமைதியை சீர் குலைக்கும் வகையிலும், சட்ட ஒழுங்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலும் தொடர்ந்து அவதூறாக பேசி வருகிறார். அவதுாறு பரப்பும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் சரவணன் கூறுகையில், ''தமிழகத்தில் பா.ஜ., என்பது மழை பெய்த உடன் முளைக்கும் காளான் போன்றது. அண்ணாமலை ஒரு காலி பெருங்காய டப்பா. அரசியல் வியாபாரி. அ.தி.மு.க., தொண்டர்கள் வெகுண்டு எழுந்தால் என்னவாகும் என்பதை அவர் யோசித்துப் பார்க்க வேண்டும். அண்ணாமலை நாக்கை அடக்க வேண்டும். இல்லையெனில் அழுகி விடும். தொடர்ந்து விமர்சித்தால் தென் மாவட்டத்தில் அண்ணாமலை கால் வைக்க முடியாத அளவில் நாங்கள் முற்றுகை போராட்டம் நடத்துவோம்'' என்றார்.