/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கருப்பு உடையுடன் வந்த அ.தி.மு.க., கவுன்சிலர்கள்
/
கருப்பு உடையுடன் வந்த அ.தி.மு.க., கவுன்சிலர்கள்
ADDED : ஜூலை 12, 2024 04:41 AM
திருப்பரங்குன்றம்: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம், தொடர் கொலைகள், சட்டம் ஒழுங்கு பிரச்னையை தடுக்காத தி.மு.க., அரசை கண்டித்து திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய கூட்டத்திற்கு அ.தி.மு.க., கவுன்சிலர்கள் கருப்பு உடை அணிந்து வந்தனர். இக்கூட்டம் சேர்மன் வேட்டையன் தலைமையில் நடந்தது. கமிஷனர் செந்தில்மணி, வட்டார வளர்ச்சி அலுவலர் பேராட்சி பிரேமா முன்னிலை வகித்தனர்.
கீழக்குயில்குடி சமணர் படுகை சுற்றுலா தலம் அமைக்க ரூ. 32 லட்சத்திற்கு ஒப்பந்தம் விடப்பட்டு 2 ஆண்டுகளாகியும் எந்த பணியும் நடக்கவில்லை.
வடிவேல்கரை பகுதியில் 150 குடியிருப்பு வீடுகள் இடியும் நிலையில் உள்ளது. ஆய்வு செய்ய வேண்டும் என கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.