/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., மகனுக்கு அரிவாள் வெட்டு
/
அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., மகனுக்கு அரிவாள் வெட்டு
அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., மகனுக்கு அரிவாள் வெட்டு
அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., மகனுக்கு அரிவாள் வெட்டு
ADDED : செப் 09, 2024 08:11 AM
சத்திரப்பட்டி : மதுரை மாவட்டம் சத்திரப்பட்டி அருகே முன்னாள் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., பொன்னம்பலத்தின் மகன் தில்லையம்பலத்தை 34, முன்பகையால் வெட்டியவரை போலீசார் தேடி வருகின்றனர்.
சத்திரப்பட்டி அருகே கருவனுாரை சேர்ந்த முன்னாள் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., பொன்னம்பலத்தின் மகன் தில்லையம்பலம் அப்பகுதி அ.தி.மு.க., இளைஞரணி செயலாளராக உள்ளார். அதே பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன் 41. கருவனுார் தி.மு.க., கிளை செயலாளராக உள்ளார். இருவரும் பங்காளிகள்.
அப்பகுதி கோயிலில் சுவாமி கும்பிடுவதில் முதல் மரியாதை அளிப்பதில் இருவரும் பிரச்னையில் ஈடுபட்டு ஜாமினில் வெளியில் வந்து உள்ளனர்.
இந்நிலையில் நேற்று ஊர் அருகே வேல்முருகன் நண்பர்களுடன் மது அருந்தியுள்ளார். அங்கு டூவீலரில் வந்த தில்லையம்பலத்தை வழிமறித்து 'ஏன் முறைத்துக் கொண்டே செல்கிறாய்' என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின் தில்லையம்பலம் வைத்திருந்த சிறிய அரிவாளை வைத்தே வேல்முருகன் அவரை வெட்டியுள்ளார்.
இதில் இடது கால், நெற்றி, கையில் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய தில்லையம்பலத்தை அருகில் உள்ளவர்கள் மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சத்திரப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.