ADDED : ஆக 18, 2024 04:50 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்,: திருமங்கலம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் சாக்கடை அடைப்பால் கழிவு நீர் ரோட்டில் செல்கிறது.
நேற்று முன்தினம் மழை பெய்ததால் ரோட்டின் ஓரம் சாக்கடை நீரும், மழை நீரும் தேங்கி உள்ளது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுகிறது.
இதை கண்டித்து அ.தி.மு.க., நகர் செயலாளர் விஜயன் தலைமையில் கட்சியினர் கழிவு நீருக்கு நடுவே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் போலீசார், நகராட்சி கமிஷனர் அசோக்குமார் பேச்சுவார்த்தை நடத்தி கழிவுநீர் அகற்றும் வாகனங்கள் உதவியுடன் சாக்கடை அடைப்புகளை அகற்றினர். இதைதொடர்ந்து போராட்டத்தை அ.தி.மு.க.,வினர் கைவிட்டனர்.

