ADDED : மார் 24, 2024 06:04 AM
அ நிறம் | அளவு
திருமங்கலம் : பா.ஜ., மதுரை மேற்கு மாவட்ட தேர்தல் பணிக்குழு ஆலோசனை கூட்டம் கப்பலுார் அலுவலகத்தில் மாவட்ட தலைவர் சசிகுமார் தலைமையில் நடந்தது.
மாவட்ட பொறுப்பாளர் சக்திவேல், பொதுச் செயலாளர் சிவலிங்கம், துணைத் தலைவர் சரவணன், செயலாளர்கள் ஜெயக்குமார், சின்னசாமி, தமிழ்மணி, அமைப்புசாரா பிரிவு பொதுச் செயலாளர் பாலா, மாநில பொறுப்பாளர் பழனிவேல் சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். வேட்பாளர் அறிமுக கூட்டம், வேட்பு மனுத்தாக்கல் குறித்து ஆலோசித்தனர்.
