/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
34 ஆண்டுகளுக்கு பின் புரவி எடுப்பு விழா 5 கிராம மக்கள் வழிபாடு
/
34 ஆண்டுகளுக்கு பின் புரவி எடுப்பு விழா 5 கிராம மக்கள் வழிபாடு
34 ஆண்டுகளுக்கு பின் புரவி எடுப்பு விழா 5 கிராம மக்கள் வழிபாடு
34 ஆண்டுகளுக்கு பின் புரவி எடுப்பு விழா 5 கிராம மக்கள் வழிபாடு
ADDED : செப் 07, 2024 05:43 AM

பாலமேடு: பாலமேடு அருகே வெ.பெரியகுளத்தில் ஹிந்து சமய அறநிலைத்துறை நிர்வாகத்தில் அய்யனார் கோயில் உள்ளது. பாறைப்பட்டி, சரந்தாங்கி, வெள்ளையம்பட்டி, மாணிக்கம்பட்டி கிராம அனைத்து சமுதாய மக்களும் வழிபடுகின்றனர்.
34 ஆண்டுகளுக்கு பின் நேற்று துவங்கி 2 நாட்கள் விழா நடக்கிறது. இதற்கான பிடி மண் கொடுக்கும் நிகழ்வு ஜூலை 10ல் நடந்தது. நேற்று காலை பாறைப்பட்டி கோயில் வீட்டிலிருந்து பூசாரி சுவாமி ஆட்டம், மேளதாளத்துடன் பழக்கூடை ஊர்வலமாக சுவாமி கண் திறக்கும் இடத்திற்கு வந்தனர். சுவாமி மற்றும் குதிரைகள் கண் திறந்து சக்தி கிடா வெட்டி வழிபட்டனர். ஐந்து ஊர் சார்பில் சுவாமிகளுக்கு பூஜைகள் அபிஷேகம் நடந்தது.
பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். கும்மிப்பாட்டு, கரகாட்டம் நடந்தது. மாலை சுவாமிகள் குதிரைகள் அய்யனார் கோயில் சென்றடைந்ததை தொடர்ந்து பொங்கல் வைத்து வழிபட்டனர். விபூதி பிரசாதம் வழங்கப்பட்டது. இன்று (செப்.7) அய்யனார் கோயிலுக்கு பூதம் சுவாமி சென்றடைதல் நிகழ்ச்சி நடக்கிறது.