/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தேர்வு பணி முடிந்ததும் தேர்தல் ஆசிரியர்கள் பாடு திண்டாட்டம்
/
தேர்வு பணி முடிந்ததும் தேர்தல் ஆசிரியர்கள் பாடு திண்டாட்டம்
தேர்வு பணி முடிந்ததும் தேர்தல் ஆசிரியர்கள் பாடு திண்டாட்டம்
தேர்வு பணி முடிந்ததும் தேர்தல் ஆசிரியர்கள் பாடு திண்டாட்டம்
ADDED : மார் 22, 2024 01:27 AM
மதுரை:'தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு இன்றும், பிளஸ் 1 தேர்வு மார்ச் 25ம் முடிகின்றன. தற்போது விடைத்தாள் மதிப்பிடும் பணிகள் துவங்கியுள்ளன. 26ல் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளும் துவங்குகின்றன.
இந்நிலையில், லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டு, ஏப்., 19ல் ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதற்காக தேர்தல் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகள் அட்டவணையை தேர்தல் கமிஷன் வெளியிட்டது.
முதற்கட்டமாக, வரும் ஞாயிறு, இரண்டாம் கட்டமாக ஏப்., 7 மற்றும் 16, மூன்றாம் கட்டமாக ஏப்., 18ல் நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுக்கான விடைத்தாள் மதிப்பிடும் பணிகள் துவங்கும் என்பதால், ஞாயிறு அன்று தேர்தல் பயிற்சி வகுப்புகளை நடத்த வேண்டாம் என ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன.
அதையேற்று, தற்போது மார்ச் 24க்கு பதில் 23ல் (சனி) முதல்கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பு நடக்கும் என சில மாவட்டங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது; பல மாவட்டங்களில் குழப்பம் உள்ளது.
இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது:
பொதுத் தேர்வு விடைத்தாள் மதிப்பிடும் பணிகள் ஞாயிறு தவிர அனைத்து நாட்களும் நடக்கின்றன. இதனால் தான், ஞாயிறு அன்று தேர்தல் பயிற்சி வகுப்பு வேண்டாம் என தெரிவிக்கிறோம். முதற்கட்ட பயிற்சியில் சில மாவட்டங்களில் குழப்பம் உள்ளது.
ஆனால், இரண்டாம் கட்ட பயிற்சி ஞாயிறு தான் நடக்கிறது. மேலும் மருத்துவ ரீதியாக, 58 வயதுக்கு மேற்பட்ட சீனியர்களின் கோரிக்கைகளை ஏற்று விலக்கு அளிப்பதில் கெடுபிடி காட்டுவதையும் தேர்தல் அதிகாரிகள் தவிர்க்க வேண்டும.
இவ்வாறு கூறினர்.

