ADDED : மார் 08, 2025 03:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார் : அ.வல்லாளபட்டி பேரூராட்சியில் மதுரை புறநகர் கிழக்கு அ.தி.மு.க., ஜெ., பேரவை சார்பில் தி.மு.க., வை விமர்சித்து திண்ணை பிரச்சாரம் நடந்தது. மேலுார், கொட்டாம்பட்டி, தெற்கு, வடக்கு ஒன்றிய செயலாளர்கள் பொன்னுச்சாமி, வெற்றிச் செழியன், பொன். ராஜேந்திரன் வரவேற்றனர்.
நகரச் செயலாளர் உமாபதி தலைமை வகித்தார். பெரியபுள்ளான் எம்.எல்.ஏ., மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் தமிழரசன் உட்பட பலர் பேசினர். பொதுக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், நிர்வாகிகள் ராஜ்கபூர், சரண்யா உட்பட பலர் பங்கேற்றனர்.