நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்: திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம் மீனாட்சிபுரம், ராயபாளையம், ஆலம்பட்டி, கட்ராம்பட்டி, புதுப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் அ.தி.மு.க., சார்பில் புதிய ஓட்டுச்சாவடி முகவர்களை தேர்ந்தெடுப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் எதிர்க்கட்சி துணைத் தலைவர் உதயகுமார் தலைமையில் நடந்தது.
இதில் தொகுதி பொறுப்பாளர் முன்னாள் எம்.எல்.ஏ., மனோகரன், மாவட்ட துணைத் தலைவர் தமிழ்ச்செல்வம், ஒன்றிய செயலாளர் அன்பழகன், ஜெ., பேரவை மாவட்ட செயலாளர் தமிழழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.