/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஏர்இந்தியா விமானங்கள் ரத்து மதுரை பயணிகள் அலைக்கழிப்பு
/
ஏர்இந்தியா விமானங்கள் ரத்து மதுரை பயணிகள் அலைக்கழிப்பு
ஏர்இந்தியா விமானங்கள் ரத்து மதுரை பயணிகள் அலைக்கழிப்பு
ஏர்இந்தியா விமானங்கள் ரத்து மதுரை பயணிகள் அலைக்கழிப்பு
ADDED : மே 09, 2024 08:37 AM
மதுரை : ஏர் இந்தியா நிறுவன ஊழியர்கள் சம்பள விவகாரத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் அடுத்தடுத்து விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மதுரை, திருச்சி பயணிகள் அலைக்கழிக்கப்பட்டனர்.
சிங்கப்பூருக்கு ஏர் இந்தியா விமானம் தினமும் மதியம் 1:50 மணிக்கு மதுரையிலிருந்து புறப்பட்டு இரவு 9:00 மணிக்கு சிங்கப்பூர் செல்லும். நேற்று திருச்சி விமான நிலையத்திலிருந்து அதிகாலை சிங்கப்பூருக்கு கிளம்ப வேண்டிய விமானம் ரத்து செய்யப்பட்டு மதுரையிலிருந்து கிளம்பும் விமானத்தில் அனுப்பி வைப்பதாக கூறி 93 பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்நிலையில் நேற்று காலை மதுரையிலிருந்து 90 பயணிகள், திருச்சி பயணிகள் 93 பேருடன் புறப்பட வேண்டிய விமானமும் ரத்து செய்யப்பட்டது. திருச்சி பயணிகள் திருப்பி அனுப்பப்பட்டனர். பயணிகளுக்காக ஓய்வறைகள், பயண சீட்டின் பணத்தை திரும்ப பெறுவதற்கான எந்த ஒரு அறிவிப்பையும் ஏர்இந்தியா நிறுவனம் வெளியிடவில்லை. இதனால் ஊழியர்களிடம் பயணிகள் 3 மணி நேரத்துக்கு மேலாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அலைகழிக்கப்பட்டனர். ஏர் இந்தியா நிறுவன ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால் இந்தியா முழுவதும் 12 மணி நேரத்தில் பல்வேறு நாடுகள், நகரங்களுக்கு செல்லும் 72க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.