ADDED : ஆக 09, 2024 01:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: கேரள மாநிலம் வயநாடு பகுதியில் நிலச்சரிவில் பலநுாறு பேர் பலியாகினர். நிவாரணப்பணிக்காக மதுரை கலெக்டர் சங்கீதாவிடம் தனது சொந்த பணம் ரூ.2 லட்சத்தை கூடல்நகர் முன்னாள் விமானப்படை வீரர் பிரகாஷ் பானிஷ்டர் 59, வழங்கினார். முன்னாள் ராணுவத்தினர் சங்கத் தலைவர் ரகுநாதன், செயலாளர் முருகன், நிர்வாகி முத்துவர்ணம் உடனிருந்தனர். 102 முறை ரத்ததானம் செய்த இவர், தற்போது சமூகசேவையில் ஈடுபட்டுள்ளார்.
அவர் கூறுகையில், ''நான் பணியில் இருந்தபோது கார்கில், குஜராத் பூகம்பம் உட்பட பல சமயங்களில் மனித இழப்புகளை பார்த்துள்ளேன்.
தற்போது வயநாடு நிலச்சரிவு பாதிப்பும் என் மனதை உலுக்கிவிட்டது. சக மனிதர்களுக்கு உதவும் நோக்கில் மனைவிக்காக கார் வாங்க சேமித்த தொகையை வழங்கினேன்'' என்றார்.