ADDED : மே 24, 2024 02:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை ஜெய்ஹிந்துபுரம் தாம்ப்ராஸ் அமைப்பின் சார்பில் வைகாசி விசாகம் அன்னதானம் நடந்தது. கிளையின் துணைத் தலைவர் ஜெகநாதன் தலைமை வகித்தார். மாநில மூத்த துணைத் தலைவர் அமுதன் முன்னிலை வகித்தார். பக்தர்களுக்கு புளியோதரை, தயிர்சாதம் வழங்கப்பட்டது.
இதில் மகளிர் அணி செயலாளர் ராஜம் மீனாட்சி, செயற்குழு உறுப்பினர் சித்ரா, பொதுக்குழு உறுப்பினர்கள் ரகுராம், ராஜலட்சுமி, முன்னாள் செயலாளர் சுரேஷ், முன்னாள் பொருளாளர் பக்தவச்சலம் உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கிளைச் செயலாளர் ராமகிருஷ்ணன் செய்திருந்தார்.