/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
முன்னாள் மாணவர் பொதுக்குழு கூட்டம்
/
முன்னாள் மாணவர் பொதுக்குழு கூட்டம்
ADDED : செப் 02, 2024 06:15 AM
சோழவந்தான் : திருவேடகம் விவேகானந்த கல்லுாரியில் முன்னாள் மாணவர் சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது.
சங்கத் தலைவர் முரளி கிருஷ்ணன் தலைமை வகித்தார். கல்லுாரி செயலாளர் சுவாமி வேதானந்த, குலபதி அத்யாத்மனந்த முன்னிலை வகித்தனர். சங்க துணைத் தலைவர் சத்திய நாராயணன் வரவேற்றார்.
முதல்வர் வெங்கடேசன் கல்லுாரி வளர்ச்சி குறித்தும், செயலாளர் சங்கர் கடந்தாண்டு நிகழ்வு குறித்தும் பேசினர். பொருளாளர் பட்டினத்தார் அறிக்கை வாசித்தார். அகத்தர உறுதி மைய ஒருங்கிணைப்பாளர் சதீஷ்பாபு, தேர்வு கட்டுப்பாட்டாளர் ஜெய்சங்கர், துணை முதல்வர் ராமமூர்த்தி, ராஜா, ஜெயபாலன் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர். முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டன.
ஒருங்கிணைப்பாளர் வடிவேல் ராஜா நன்றி கூறினார்.