ADDED : மே 14, 2024 06:14 AM

மதுரை : மதுரை தியாகராஜர் கலைக்கல்லுாரியில் 1979 - 82 ல் கணிதப் பிரிவில் பயின்ற மாணவர்கள், 42 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் சந்தித்து பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
முன்னாள் மாணவர் எழுமலை, பாரதியார் மெட்ரிக் பள்ளி நிறுவனர் பொன் கருணாநிதி மாணவர்களை வரவேற்றனர். முன்னாள் பேராசிரியர்கள் கோகுல்நாத், விஜயராகவன், சுப்பிரமணியம், கிரிதரன் பாராட்டி பேசினர். ஓய்வுபெற்ற பேராசிரியர் குமரேசன் ஆஸ்திரேலியாவில் இருந்து ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
பழைய மாணவர்களின் சுயகுறிப்புகள் அடங்கிய 'டிஜிட்டல் டைரி'யை தென்ஆப்பிரிக்காவில் உள்ள கல்வியாளர் பாஸ்கர் தொடங்கி வைத்தார். ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் கணேசன், சந்திரன், தேரியப்பன், ஜான் அலெக்சாண்டர், பாலசுப்பிரமணியன், விஸ்வநாத், கண்ணன், பகவதி, முத்துக்குமார் நடத்தினர்.
இவர்கள் சார்பில் 'நகரக்கூடிய ப்ரொஜெக்டர்' ஒன்று கல்லுாரி முதல்வர் பாண்டியராஜாவிடம் வழங்கப்பட்டது.
