ADDED : மே 18, 2026 07:53 PM
அ நிறம் | அளவு
டி.கல்லுப்பட்டி, ஏப். 19–
டி.கல்லுப்பட்டி காந்தி நிகேதன் மேல்நிலைப்பள்ளியில் 1990 – 91 ல் பயின்ற முன்னாள் மாணவ, மாணவியர் சந்திப்பு நடந்தது. முன்னாள் மாணவர் தொழிலதிபர் சுந்தரராஜ் தலைமை வகித்தார். சமூகஆர்வலர் குமார், லண்டனில் வசிக்கும் பார்த்திபன், துணை கலெக்டர் முத்துலட்சுமி, மேல்நிலைப்பள்ளி உதவித் தலைமை ஆசிரியை அபிராமி, பட்டதாரி ஆசிரியை நாகலட்சுமி உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். தங்கள் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
கூட்டத்தில் ஆண்டுதோறும் 100 மாணவ, மாணவியருக்கு பள்ளி, கல்லுாரி கட்டணம் செலுத்தி உதவுவது, வசதி குன்றியவர்களுக்கு மருத்துவ கட்டணம் வழங்குவது உட்பட பல தீர்மானங்களை நிறைவேற்றினர். சென்னை வங்கி மேலாளர் சம்சுதீன் நன்றி கூறினார்.
