/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அமெரிக்க பல்கலை படிப்பு மதுரை அதிகாரி தேர்வு
/
அமெரிக்க பல்கலை படிப்பு மதுரை அதிகாரி தேர்வு
ADDED : ஆக 05, 2024 05:45 AM

மதுரை: அமெரிக்காவின் கார்னெல் பல்கலையில் பெல்லோஷிப் படிப்புக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள மதுரையைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி எம்.ஜி.ராஜமாணிக்கம் ஆக.7 ல் அமெரிக்கா செல்கிறார்.
கேரள மாநில தேவசம் போர்டு வருவாய் செயலாளரான ராஜமாணிக்கம், 2008 கேடர் ஐ.ஏ.எஸ்., அதிகாரி.
இவரது சொந்த ஊர் மதுரை மாவட்டம் திருவாதவூர். இவர் கேரள மாநிலம் கண்ணுார், எர்ணாகுளம் மாவட்ட கலெக்டர், ஊரக வளர்ச்சித்துறை ஆணையர், கேரள தொழில் மேம்பாட்டுக் கழக நிர்வாக இயக்குனர் உட்பட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.
இவருக்கு அமெரிக்காவின் கார்னெல் பல்கலையில் ஹூபர்ட் எச்.ஹம்ப்ரீ பெல்லோஷிப் படிப்புக்கு அனுமதி கிடைத்துள்ளது. இந்தியாவில் ஆண்டுக்கு ஒருவருக்கே இந்தப் பல்கலையில் பெல்லோஷிப் படிப்புக்கு அனுமதி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.