ADDED : மே 29, 2024 04:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை எல்லீஸ்நகரைச் சேர்ந்தவர் வேலுச்சாமி 82. ஓய்வுபெற்ற விமானப்படை வீரர். நேதாஜியின் ராணுவ படை வீரர்களான தியாகிகளுடன் நட்பில் இருந்தவர்.
சுவாமி விவேகானந்தர் மதுரை வந்த பிப்.,2ம் தேதி பிறந்தவர் என்பதால், அந்நாளில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வந்தார்.
10 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டுள்ளார். உடல்நலக்குறைவால் நேற்று காலமானார்.
தனது உடலை மருத்துவ மாணவர்களின் கல்விக்காக கொடுக்க வேண்டும் என 10 ஆண்டுகளுக்கு முன்பே விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்திருந்தார்.
அவரது விருப்பப்படி இன்று(மே 29) அரசு மருத்துவக்கல்லுாரியில் உடல் ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகளை அவரது மகன் நேதாஜி சுவாமிநாதன் செய்து வருகிறார்.