/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பத்தாண்டுகளாக பயன்பாடு இல்லாத மேல்நிலைத் தொட்டி
/
பத்தாண்டுகளாக பயன்பாடு இல்லாத மேல்நிலைத் தொட்டி
ADDED : ஜூலை 29, 2024 06:55 AM

கொட்டாம்பட்டி: காடுகாவல் நகர் பகுதி மக்களுக்கு குடிதண்ணீர் இல்லாததால் மக்கள் கிராமம் கிராமமாக குடிநீரை தேடி அலையும் அவலம் நிலவுகிறது.
கச்சிராயன்பட்டி ஊராட்சி காடுகாவல் நகரில் இருநாறுக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப் பகுதியில் 2014 ல் குடிநீர்
வடிகால் வாரியம் மூலம் 10 ஆயிரம் கொள்ளவுள்ள மேல்நிலை தொட்டி கட்டப்பட்டது. பிறகு கச்சிராயன்பட்டியில் இருந்து குழாய்கள் பதிக்கப்பட்டு காவிரி கூட்டுக் குடிநீர் கொண்டுவர ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் இன்று வரை தொட்டி பயன்பாட்டுக்கு வரவில்லை.
அப்பகுதி ஆறுமுகம் கூறியதாவது: ஊராட்சி சார்பில் ஆழ்துளை கிணறு அமைத்து பிளாஸ்டிக் தொட்டியில் தண்ணீர் சப்ளை செய்யப்பட்டது. ஆறு மாதங்களுக்கு முன் மோட்டார் பழுதானதால் ஒரு கி.மீ., தொலைவில் உள்ள தனியார் கிணற்றில் தண்ணீர் எடுத்தோம். இங்குள்ள மோட்டாரும் 15 நாட்களுக்கு முன் பழுதானதால் 4 கி.மீ., தொலைவில் உள்ள பால்குடியில் போய் குடிநீர் கொண்டு வருகிறோம். கொட்டாம்பட்டி ஒன்றிய அதிகாரிகளிடம் புகார் கூறியும் நடவடிக்கை இல்லை என்றார்.
காவிரி கூட்டுக் குடிநீர் திட்ட அதிகாரிகள் கூறுகையில், ''உடனே மேல்நிலை தொட்டியில் காவிரி நீரை நிரப்பி தொட்டி பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றனர்.