sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

'ஆளுக்கு' ஒரு நகர்ப்புற சுகாதார நிலையம் அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல்

/

'ஆளுக்கு' ஒரு நகர்ப்புற சுகாதார நிலையம் அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல்

'ஆளுக்கு' ஒரு நகர்ப்புற சுகாதார நிலையம் அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல்

'ஆளுக்கு' ஒரு நகர்ப்புற சுகாதார நிலையம் அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல்


ADDED : ஆக 07, 2024 05:25 AM

Google News

ADDED : ஆக 07, 2024 05:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை, : 'முதல்வர் ஸ்டாலினிடம் அமைச்சர்கள் மூர்த்தி, தியாகராஜன் வைத்த கோரிக்கைகள் ஏற்கப்பட்டு மதுரையில் எஸ்.ஆலங்குளம், ஆரப்பாளையத்தில் நகர்ப்புற சுகாதார நிலையங்கள் தலா ரூ.1.2 கோடி மதிப்பீட்டில் கட்டப்படுவதாக' மதுரையில் அமைச்சர் சுப்ரமணியன் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: மதுரை அரசு மருத்துவமனையில் ரூ.20 கோடி மதிப்பில் குழந்தைகள் நல ஆராய்ச்சி மைய கட்டடம், வார்டுகளுக்கான கழிவுநீர் சுத்திகரிப்பு கட்டடம் ரூ.3.60 கோடி மதிப்பில் கட்டப்படுகிறது.

மேலுார் அரசு மருத்துவமனையில் கூடுதலாக 60 படுக்கைகளுடன் அவசர கால தீவிர சிகிச்சை பிரிவு ரூ.9.21 கோடி மதிப்பிலும் 50 படுக்கைகளுடன் தீவிர சிகிச்சை பிரிவு கட்டடம் ரூ.20 லட்சம் செலவில் கட்டப்படுகிறது.

உசிலம்பட்டியில் ஒருங்கிணைந்த ஆய்வக கட்டடம் ரூ.ஒரு கோடி செலவில் கட்டப்படுகிறது.

சமயநல்லுார், செக்கனுாரணி, கச்சைகட்டி, அலங்கை, தும்மக்குண்டு, விக்கிரமங்கலம், மில்கேட், மேலக்காலில் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேவையான புதிய கட்டடங்கள் கட்டப்படுகிறது. மதுரையைப் பொறுத்தவரை ரூ.66.86 கோடி செலவில் 18 மருத்துவ கட்டட பணிகள் நடக்கிறது.அமைச்சர் மூர்த்தி கோரிக்கைக்கு ஏற்ப அவரது தொகுதியில் எஸ். ஆலங்குளம், அமைச்சர் தியாகராஜன் கோரிக்கைப்படி ஆரப்பாளையத்திலும் தலா ரூ.1.2 கோடி மதிப்பில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் கட்டும் பணி நடக்கிறது என்றார்.

பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம், எம்.எல்.ஏ.,க்கள் வெங்கடேசன், பூமிநாதன், மாவட்ட ஊராட்சி தலைவர் சூரியகலா , மதுரை கிழக்கு ஒன்றிய குழுத் தலைவர் மணிமேகலை, சுகாதார துணை இயக்குநர் குமரகுருபரன், மேலுார் ஆர்.டி.ஓ. ஜெயந்தி பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us