ADDED : ஆக 06, 2024 05:08 AM
அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் பேரூராட்சி குளோப் நகரில் சிறிய ஓட்டு வீட்டில் அங்கன்வாடி மையம் 10 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது.
இந்த மையத்தில் 15க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர். இந்த வீட்டில் மையத்திற்கு தேவையான சத்துணவு, அரிசி மூடைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. சமையலும் நடக்கிறது. இம்மையத்தில் இட வசதி இல்லாததால் குழந்தைகளின் விளையாட்டு பொருட்களை மூடையாகக் கட்டி வைத்துள்ளனர். குழந்தைகள் கல்வி கற்க, துாங்க சிரமப்படுகின்றனர்.
அப்பகுதியினர் கூறியதாவது: பேரூராட்சி அலுவலகம் முன்பு இடிந்து விழுந்த அங்கன்வாடி மையத்தை பல ஆண்டுகள் கட்டவில்லை. இங்கு குழந்தைகளுக்கு கழிப்பிட வசதி இல்லை. தடுப்பூசிக்கு வரும் கர்ப்பிணிகள், தாய்மார்கள் அவதிப்படுகின்றனர். புது அங்கன்வாடி மையம் கட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.