ADDED : மே 29, 2026 08:10 PM
மதுரை: கலைஞர் நுாற்றாண்டு நுாலகத்தில் பொதுநுாலக இயக்ககம் சார்பில் கோடைக் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
நேற்று பயிற்சியாளர் அசோக்குமார் குழந்தைகளுக்கு அனிமேஷன் பற்றி பயிற்சி வழங்கினார். அனிமேஷன் உருவாக்க கருத்துகள் மிக எளிமையாக, நடைமுறை உதாரணங்களுடன் விளக்கப்பட்டன. குழந்தைகளே படம் வரைதல், அவற்றை மாற்றி நகர்த்துதல், இரட்டிப்பாக்குதல் போன்ற நுட்பங்கள் கற்பித்து, செய்முறை பயிற்சியும் அளிக்கப்பட்டது.
இதில் குழந்தைகள் நிலையான படங்கள், கதாபாத்திரம் எப்படி உயிரோட்டம் பெறுகிறது என்பதை புரிந்துகொண்டனர். அனிமேஷன் உலகில் விலங்குகள், கதாபாத்திரங்களை பேச, நடக்க, ஓட வைப்பது எப்படி என்று விளக்கினர். தொழில்நுட்பம், கற்பனை இணைந்து எப்படி திரைப்படம், கார்ட்டூன் உருவாக்கத்திற்கு உதவுகிறது என்பதையும் குழந்தைகள் அறிந்துகொண்டனர்.
