/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அங்கித் திவாரிக்கு ஜாமின் நிபந்தனை தளர்வு
/
அங்கித் திவாரிக்கு ஜாமின் நிபந்தனை தளர்வு
ADDED : ஆக 31, 2024 06:40 AM

மதுரை, : திண்டுக்கல் அரசு டாக்டரிடம் லஞ்சம் பெற்ற வழக்கில் மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு ஜாமின் நிபந்தனையை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தளர்த்தியது.
திண்டுக்கல் அரசு மருத்துவமனை துணை கண்காணிப்பாளர் சுரேஷ்பாபு. இவரது சொத்து குவிப்பு வழக்கை முடிக்க ரூ.40 லட்சம் லஞ்சம் பெற்றதாக மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை 2023 டிச.,1 ல் திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
அவருக்கு உச்சநீதிமன்றம், 'திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஜாமின் உத்தரவாதம் தாக்கல் செய்ய வேண்டும்,' என உத்தரவிட்டு இடைக்கால ஜாமின் அனுமதித்தது. திண்டுக்கல் நீதிமன்றம்,'மறு உத்தரவு வரும்வரை அங்கித் திவாரி தினமும் காலை 10:00 மணிக்கு ஆஜராக வேண்டும்,' என நிபந்தனை விதித்தது. அதில் தளர்வு கோரி உயர்நீதிமன்றத்தில் அங்கித் திவாரி மனு செய்தார். மே 23ல் தனிநீதிபதி,'வாரம் ஒருமுறை ஆஜராக வேண்டும்,' என உத்தரவிட்டார். அதில் தளர்வு கோரி அங்கித் திவாரி மனு செய்தார்.
நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி: மனுதாரர் 15 நாட்களுக்கு ஒருமுறை திங்கள்கிழமைகளில் காலை 10:30 மணிக்கு திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசில் ஆஜராக வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.