நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பாலை : திருப்பாலை பண்டாபீஸ் காலனி அறம் குடியிருப்போர் நலச்சங்க முதலாம் ஆண்டு விழா நடந்தது. கவுன்சிலர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். கிழக்கு மண்டலத் தலைவர் வாசுகி முன்னிலை வகித்தார்.
சங்கத் தலைவர் ஜோதிபாசு வரவேற்றார். சிறப்பு விருந்தினராக போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண்குமார் பங்கேற்றார். மாநகராட்சி உதவிப் பொறியாளர் மணியன், சுகாதார ஆய்வாளர் அலாவுதீன் பேசினர். சங்கச் செயலாளர் செந்தில்குமார் நன்றி கூறினார். முன்னதாக சுதந்திர தினத்தையொட்டி குற்றப்பிரிவு டி.எஸ்.பி., ஜஸ்டின் பிரபாகரன் கொடி ஏற்றினார். சங்க நிர்வாகிகள், குடியிருப்போர் பங்கேற்றனர்.

