ADDED : பிப் 24, 2025 03:47 AM
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் ஒன்றியம் விரகனூர் ஆரம்பப் பள்ளி ஆண்டு விழா நடந்தது. வட்டார கல்வி அலுவலர்கள் அருள் முருகன், பேபி, மதுரை மாவட்ட ஆசிரியர் கல்வி நிறுவன முதுநிலை பேராசிரியர் டேவிட் பேசினர்.
ஆசிரியர் பூர்ணவள்ளி தொகுத்து வழங்கினார். பள்ளித் தலைமை ஆசிரியர் கண்மணி, ஆசிரியர்கள் பிரமிளா, அழகுமீனாள், விஜயலட்சுமி, வள்ளிநாயகி, சேகர், பிரின்சி ஜெசியா ஏற்பாடுகள் செய்தனர். உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் சாந்தி, நன்கொடையாளர்கள் கணேசன், பாசப்பிரபு, வாஞ்சிநாதன், கிருஷ்ணா கலந்து கொண்டனர்.
விளையாட்டு போட்டிகளில் வென்றவர்கள். அதிக நாட்கள் பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
அனைத்து மாணவர்களுக்கும் அகில் நற்பணி மன்ற நிர்வாகி சின்னச்சாமி சார்பில் பரிசு வழங்கினர். ஆசிரியர் தேன்மொழி நன்றி கூறினார்.

