ADDED : ஆக 01, 2024 04:55 AM
மதுரை: மாவட்ட குழந்தைகள் நலன், சிறப்பு சேவைகள் துறை, மாவட்ட போலீஸ் துறை, இந்திய செஞ்சிலுவை சங்கம், அதங்கோட்டாசன் முத்தமிழ் கழகம், ரோஜா வனம் டிரஸ்ட் இணைந்து போதைக்கு எதிரான விழிப்புணர்வு கருத்தரங்கை நடத்தின.
நாகமலைபுதுக்கோட்டை வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, திருவேடகம் விவேகானந்தா கல்லுாரி கருத்தரங்கில் மதுவிலக்கு டி.எஸ்.பி., சிவசுப்பு பங்கேற்றார். அவர் பேசுகையில், ''மாணவர்கள் ஒழுக்க நெறியுடன் வாழ்வதால் கிடைக்கும் பயன்கள், குடும்பத்தில் யாரேனும போதை பழக்கத்தில் இருந்தால் அவர்களுக்கு அதன் தீங்கை எடுத்துரைக்க வேண்டும் என்பது குறித்து பேசினார்.
செஞ்சிலுவை சங்க செயலாளர் ராஜ்குமார் போதை பொருட்களால் ஏற்படும் விளைவுகள், குடும்ப பொருளாதார பிரச்னைகள் குறித்து பேசினார். குழந்தைகள் பாதுகாப்பு அலகின் நிர்வாகி அருள், மாணவர்கள் போதையால் தவறான பழக்க வழக்கங்களுக்கு ஆளாகிவிடக் கூடாது என்றார். முன்னதாக கல்லுாரி முதல்வர்கள் வெங்கடேசன், செம்மலர் வரவேற்றனர். கல்லுாரி இளஞ்செஞ்சிலுவை சங்க உறுப்பினர்கள் அறிவழகன், ராஜகோபால், சிலம்பரசன் ஒருங்கிணைத்தனர்.