/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஜீவன் ர க் ஷா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
/
ஜீவன் ர க் ஷா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
ADDED : ஜூன் 01, 2024 04:59 AM
மதுரை: தண்ணீர், மின்சாரம், விபத்து, தீ விபத்து, நிலச்சரிவு, விலங்குகள் தாக்குதல், சுரங்க மீட்பு நடவடிக்கையில் சிக்கியவர்களை மீட்டவர்களுக்கு மத்திய அரசின் ஜீவன் ரக்ஷா விருது வழங்கப்படுகிறது.
மிக அபாயமான நிலையில் உள்ளவரை போராடி மீட்டவர்களுக்கு சர்வோத்தம் ஜீவன் ரக்ஷா பதக்கம், துணிச்சலுடன் தாமதமின்றி செயல்பட்டு மீட்டவருக்கு உத்தம் ஜீவன் ரக்ஷா பதக்கம், தனக்கு காயம் ஏற்பட்டாலும் வீரத்துடன் செயல்பட்டு உயிரை காப்பாற்றியவருக்கு ஜீவன் ரக்ஷா பதக்கம் வழங்கப்படும் என மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன் தெரிவித்துள்ளார்.
விருதுபெற தகுதியுள்ளவர்கள் 2024ம் ஆண்டுக்கான ஜீவன் ரக்ஷா பதக்க விருதுக்கான விண்ணப்பம்' என குறிப்பிட்டு விண்ணப்பத்தை ஜூன் 20 க்குள் அனுப்ப வேண்டிய முகவரி: மாவட்ட விளையாட்டு அலுவலர், விளையாட்டு அலுவலகம், ரேஸ்கோர்ஸ் மைதானம், மதுரை.