நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை லேபர் வெல்பர் அசோசியேஷன் (எம்.எல்.டயுள்யூ.ஏ.,) மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழா தலைமையாசிரியர் நாகசுப்பிரமணியன் தலைமையில் நடந்தது.
மாணவர்கள் அய்யங்காளை, சரவணபாண்டியன் ஆகியோரை கண்ணதாசன் நற்பணி மன்றத் தலைவர் சொக்கலிங்கம் பாராட்டி பரிசு வழங்கி, நிதியுதவி அளித்தார்.
மன்றப் பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, உதவி தலைமையாசிரியர் சவுந்திரபாண்டியன் பங்கேற்றனர். ஆசிரியர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.