ADDED : ஜூன் 15, 2026 09:32 PM
மதுரை: திருமோகூரில் மதுரை யானைமலை கிரீன் பவுண்டேஷன் அமைப்பு சார்பில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.தலைமையாசிரியர் தென்னவன் தலைமை வகித்தார். மாற்றுத் திறனாளருக்கான இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் சச்சின் சிவா பேசினார். மரக்கன்று நடப்பட்டது. அதிக மதிப்பெண் பெற்ற ஒத்தக்கடை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 13 பேரை பாராட்டி கவுரவித்தனர்.
ஆசிரியறர்கள் சுலைகா பானு, காட்வின் வேதநாயகம், சீனிவாசன், விரிவுரையாளர் டேவிட், பவுண்டேஷன் மூத்த உறுப்பினர் ஜெயபாலன், அப்துல் கலாம் அமைப்பு நிறுவனர் செந்தில், மாற்றம் தேடி சமூக நல அமைப்பு நிறுவனர் பாலமுருகன், சின்னமாங்குளம் தலைமையாசிரியர் சீனிவாசன் பங்கேற்றனர். முன்னதாக ஆசிரியர் கார்த்திக் வரவேற்றார். பிரபு தொகுத்து வழங்கினார். ஸ்டெல்லா நன்றி கூறினா்.
