ADDED : ஜூன் 22, 2026 06:21 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை ஐராவதநல்லுார் ராஜா நகர் வேலன் தெருவில் உள்ள ஒரு வீட்டினுள் மனநலம் பாதித்த 35 வயது பெண் வெளியே வரமுடியாமல் தவித்துக்கொண்டிருப்பதாக அனுப்பானடி தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கிடைத்தது.
நிலைய அலுவலர் அசோக்குமார், சிறப்பு நிலை அலுவலர் கணேஷ், பயிற்சி நிலைய அலுவலர் அறிவழகன் தலைமையில் ஏட்டுகள் முருகன், ரவிக்குமார், திருநாவுக்கரசு, பிரபாசன் ஆகியோர் கட்டர் உள்ளிட்ட உபகரணங்களை கொண்டு கதவை உடைத்து பாதுகாப்பாக அப்பெண்ணை மீட்டனர். அவர்களை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.
