/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஆரப்பாளையம் குறுவட்ட வாலிபால், பாட்மின்டன் போட்டி
/
ஆரப்பாளையம் குறுவட்ட வாலிபால், பாட்மின்டன் போட்டி
ADDED : ஆக 14, 2024 12:44 AM
மதுரை : பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆரப்பாளையம் குறுவட்ட பள்ளிகளுக்கு இடையிலான வாலிபால், பாட்மின்டன் போட்டி நடந்தது. மதுரை செயின்ட் பிரிட்டோ மேல்நிலைப் பள்ளி போட்டிகளை நடத்தியது.
வாலிபால் போட்டி
மகளிர் 14 வயது பிரிவில் ஹோலிபேமிலி பள்ளி முதலிடம், செவன்த்டே மெட்ரிக் பள்ளி 2ம் இடம் பெற்றன. 17 வயது பிரிவில் ஹோலிபேமிலி பள்ளி முதலிடம், எஸ்.ஆர்.டபிள்யூ.டபிள்யூ.ஓ. பள்ளி 2ம் இடம் பெற்றன. 19 வயது பிரிவில் கேப்ரன் ஹால் பள்ளி முதலிடம், வெள்ளி வீதியார் பள்ளி 2ம் இடம் பெற்றன.
ஆடவர் பாட்மின்டன்
14 வயது ஆடவர் பாட்மின்டன் ஒற்றையர் பிரிவில் செவன்த்டே பள்ளி முதலிடம், செயின்ட் பிரிட்டோ மெட்ரிக் பள்ளி 2ம் இடம் பெற்றன. இரட்டையர் பிரிவில் செயின்ட் பிரிட்டோ மெட்ரிக் பள்ளி முதலிடம், செயின்ட் பிரிட்டோ பள்ளி 2ம் இடம் பெற்றன. 17 வயது மற்றும் 19 வயது ஒற்றையர், இரட்டையர் பிரிவுகளில் செயின்ட் பிரிட்டோ பள்ளி முதலிடம், சிவகாசி நாடார் மெட்ரிக் பள்ளி 2ம் இடம் பெற்றன.
மகளிர் பாட்மின்டன்
14 வயது மகளிர் பாட்மின்டன் ஒற்றையர் பிரிவில் எஸ்.டி.ஏ.மெட்ரிக் பள்ளி முதலிடம், எம்.எச்.எஸ்.எஸ். பள்ளி 2ம் இடம், இரட்டையர் பிரிவில் மகபூப்பாளையம் அரசுப் பள்ளி முதலிடம், குட்ெஷப்பர்டு பள்ளி 2ம் இடம் பெற்றன.
17 வயது ஒற்றையர் பிரிவில் ஹோலிபேமிலி பள்ளி முதலிடம், சிவகாசி நாடார் பள்ளி 2ம் இடம், இரட்டையர் பிரிவில் சிவகாசி நாடார் பள்ளி முதலிடம், ஹோலிபேமிலி பள்ளி 2ம் இடம் பெற்றன. 19 வயது ஒற்றையர் பிரிவில் மகபூப்பாளையம் அரசுப் பள்ளி முதலிடம், குட்ெஷப்பர்டு பள்ளி 2ம் இடம், இரட்டையர் பிரிவில் கேப்ரன் ஹால் பள்ளி முதலிடம், மகபூப்பாளையம் அரசுப் பள்ளி 2ம் இடம் பெற்றன.