ADDED : ஜூலை 01, 2024 05:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துாத்துக்குடி : துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்துவதில் இரு கும்பல்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. இப்பிரச்னையில் ஏப். 23ல் சரமாரியாக பெட்ரோல் குண்டு வீசி தாக்கிக்கொண்டனர்.
இதில் ஈடுபட்ட முக்கிய புள்ளியான கோவில்பட்டி செண்பகவல்லி நகரை சேர்ந்த கார்த்திக் ராஜா (எ) பாம்பு கார்த்திக் 29, என்பவர் எஸ்.பி. பாலாஜி சரவணன் பரிந்துரையில் கலெக்டர் லட்சுமிபதி உத்தரவில் நேற்று குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். இதே வழக்கில் ஏற்கனவே 8 பேர் குண்டாசில் கைது செய்யப்பட்டுள்ளனர்.