ADDED : ஜூலை 09, 2024 05:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை அரசு இசைக்கல்லுாரியில் ஜூலை 12 முதல் பகுதிநேர நாட்டுப்புற கலைப்பயிற்சி முகாம் நடக்கிறது.
17 வயது முதல் ஆண்டுக்கு ரூ.500 கட்டணத்தில் இசை நாடகம், கரகாட்டம், மரக்காலாட்டம், பறையாட்டம் கலைகளில் வாரந்தோறும் வெள்ளி, சனிக் கிழமைகளில் மாலை 4:00 முதல் 6:00 மணி வரை பயிற்சி நடைபெறும்.
இதற்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. ஓராண்டு பயிற்சி முடிவில் 8 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு தேர்வு நடத்தி கலைப்பண்பாட்டுத் துறை சார்பில் சான்றிதழ் வழங்கப்படும்.
தேர்ச்சி பெற்றவர்கள், வருங்காலங்களில் பகுதிநேர நாட்டுப்புறக் கலையாசிரியர்களாக பணியாற்றலாம். விவரங்களுக்கு மேற்பார்வையாளர் தமிழரசியை 95667 18704 தொடர்பு கொள்ளலாம் என, கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார்.