ADDED : ஜூலை 26, 2026 05:31 PM
அ நிறம் | அளவு
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகர் லலிதா பரமேஸ்வரி ராஜ சியாமளா மகா வராஹி அம்மன் கோயிலில் ஆஷாட நவராத்திரி உற்ஸவ விழா ஜூலை 15ல் துவங்கியது.
தினமும் அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், பூஜை தீபாராதனை நடந்தது. நிறைவு விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் விநாயகர் வழிபாடு, பைரவர் வழிபாடு, மகா வராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி சகஸ்ரநாம அர்ச்சனை, விளக்கு பூஜை முடிந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
அவனியாபுரம் சொர்ண வராகி அம்மன் கோயிலில் ஆஷாட நவராத்திரி தினங்களில் தினமும் ஒரு அலங்காரம் நடந்தது. நிறைவு தினத்தை முன்னிட்டு திருக்கல்யாணம், தீபாராதனை நடந்தது.
