ADDED : ஆக 06, 2026 06:01 PM
மேலுார்: மேலுாரில் ஓய்வு பெற்ற அரசு அலுவலர் சங்க ஆண்டு விழா நடந்தது.
நிர்வாகிகள் தவமணி, செந்தில்ராஜன் வரவேற்றனர். தலைவர் தர்மலிங்கம் தலைமை வகித்தார். இணைச் செயலாளர்கள் சிவஞானம், மலையாளம் முன்னிலை வகித்தனர். செயலாளர் சீனிவாசன், பொருளாளர் வீரபாண்டி ஆண்டறிக்கை, நிதிநிலை அறிக்கை வாசித்தனர். அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு நிர்வாகிகள் சேகர்,ஸ்ரீதர், தினகரன் பரிசு வழங்கினர். பரமக்குடி ஆர்.டி.ஓ., சரவணபெருமாள், திருச்சி துணை கலெக்டர் மணிமாறன், மேலுார் தாசில்தார்கள் பிரேம் கிஷோர், (சமூகநலம்) ராமச்சந்திரன், மதுரை கனிமவள துணை தாசில்தார் சிங்காரவேலன், ஸ்டேட் மற்றும் ரெப்கோ வங்கி மேலாளர்கள் சாஜன் சாலமோன் ராஜா, மங்கையர்க்கரசி, டாக்டர் பரத், நிர்வாகிகள் பழனிச்சாமி, தாமோதரன், முருகன், சலீம் பேசினர். சங்க உறுப்பினர் சேட்பாபு நன்றி கூறினார்.
