ADDED : ஜூன் 13, 2026 10:02 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை எம்.எல்.டபிள்யு.ஏ., மேல்நிலைப் பள்ளியில் பணி நிறைவு பெற்ற தலைமை ஆசிரியர்கள் சங்கம் சார்பில் மாதாந்திர கூட்டம், தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடந்தது.
‘முதுமை ஒரு வரமே’ என்ற தலைப்பில் பேசிய நல்லாசிரியர் விருது வென்ற இளமனுார் மேல்நிலைப் பள்ளி தமிழாசிரியர் மகேந்திரபாபு, தனது புத்தகங்களை சங்கத்திற்கு வழங்கினார். சங்கத் துணைத் தலைவர்கள் ஆரோக்கியராஜன், ரேணுகா, செயலாளர் பாலசுப்பிரமணியன், இணைச் செயலாளர்கள் குபேந்திரன், நாகசுப்பிரமணியன் உள்ளிட்டோர் பேசினர்.
பொருளாளர் ரமேஷ்பாபு நன்றி கூறினார். புதிய உறுப்பினர்கள் அறிமுகம் செய்யப்பட்டனர்.
