ADDED : ஆக 01, 2026 06:21 PM
அ நிறம் | அளவு
பேரையூர்: டி.கல்லுப்பட்டி வட்டார அளவிலான குறுவட்ட போட்டிகளை அத்திபட்டி ராமையா நாடார் பள்ளி நடத்தியது.
900 மாணவ, மாணவிகள் வெற்றி பெற்றனர். பள்ளிச் செயலாளர் சுதந்திரசேகரன் தேசிய கொடி ஏற்றி துவக்கி வைத்தார். மெட்ரிக் பள்ளி செயலாளர் மாரியப்பன், துணைத்தலைவர் சுந்தரமூர்த்தி விளையாட்டுப் போட்டியை துவக்கி வைத்தனர். விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு நிர்வாகிகள் பரிசளித்தனர். தலைமை ஆசிரியர் முத்தழகு சிறப்புரையாற்றினார். உடற்கல்வி ஆசிரியர் இளங்கோவன் நன்றி தெரிவித்தார்.
